பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.
சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.
அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.
இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை மறக்க முடியுமா என்ன? அவர் காமெடி காட்சிகளை கொண்டு உருவாக்கிய மீம்கள் தற்போது உலக நடப்புகள் அனைத்திற்கும் பொறுத்தமாக உள்ளன.
இந்நிலையில் பிக்பாஸில் சனம் வாக்குவாதத்திற்கும் நானும் ரவுடி தான் என வடிவேலு அதிகாரி ஒருவரிடம் காமெடி செய்யும் மீம் வைத்து நெட்டிசன்கள் கலாய்க்க அதை நடிகர் சதீஷ் பகிர்ந்துள்ளார்.