சூறாவளிகளின் நகர்வுகள் தொடர்பான செய்திகளை அறியும் போது , நம் மனதில் பீதி ஏற்படும் அதேவேளை , சூறாவளிகளின் விசித்திரமான பெயர் தொடர்பான சந்தேகங்களும் எழக்கூடும் . சூறாவளிகளுக்கு யார் பெயர் சூட்டுகிறார்கள், எப்போது சூட்டுகிறார்கள் என்ற கேள்விகள் ஏற்படக்கூடும்.
சூறாவளிகளை இலகுவாக நினைவிற் கொள்வதற்காக அவற்றுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்ன. விஞ்ஞானிகளின் சமூகம், ஊடகங்கள், அனர்த்த முகாமைத்துவங்கள் போன்றவற்றுக்கு பெயர்கள் மூலம் சூறாவளிகளை அடையாளம் காண்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இலகுவாக இருக்கும் .
உலகின் ஒவ்வொரு சமுத்திரப் பிராந்தியங்களிலும் உள்ள பிராந்திய விசேட வளிமண்டலவியல் நிலையங்கள் ( Regional Specialised Meteorological Centres ( RSMCs ) (RSMCs ) மற்றும் வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை நிலையங்கள் ( Tropical Cyclone Warning Centres (TCWCs ) ஆகியவற்றினாலேயே சூறாவளிகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன .
உலகில் 6 பிராந்திய விசேட வளிமண்டலவியல் நிலையங்கள் மற்றும் 5 வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை நிலையங்கள் உள்ளன .
அந்தந்த பிராந்தியங்களில் உள்ள நாடுகள் இணைந்து , முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியலொன்றின் அடிப்படையில் சூறாவளிகளுக்குப் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
இந்திய வளிமண்டலவியல் திணைக்களமும் மேற்படி 6 பிராந்திய விசேட வளிமண்டலவியல் நிலையங்களில் ஒன்றாகும் .
வங்காள விரிகுடா , அரபுக் கடல் உட்பட வட இந்து சமுத்திரப் பிராந்திய சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டுவதற்கும் சூறாவளிகள் தொடர்பாக இந்தியா தவிர்ந்த பிராந்தியத்தின் மேலும் 12 நாடுகளுக்கு முன்னெச்சிரிக்கைகளை விடுப்பதற்கும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் பொறுப்பாக உள்ளது.
2000 ஆம் ஆண்டில் , உலக வளிமண்டலவியல் அமைப்பு ஃ ஆசிய மற்றும் பசுபிக்குக்கான ஐக்கிய நடுகள் பொருளாதார சமூக ஆணைக்குழு எனும் நாடுகள் குழுவொன்று இணைந்து இந்து சமுத்திர வட பிராந்தியத்தில் ஏற்படும் சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டுவதற்குத் தீர்மானித்தன.
பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, மியன்மார், ஒமான், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகியனவே மேற்படி நாடுகளாகும் . 2018 ஆம் ஆண்டில், ஈரான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யேமன் ஆகிய மேலும் 5 நாடுககள் இதில் இணைந்தன.
13 நாடுகளும் இணைந்து பெயர்ப்பட்டியலொன்றை சமர்ப்பித்து சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது .
முந்தைய பட்டில் பெயர்கள் முடிவடைந்தவுடன் இறுதியாக கடந்த ஏப்ரலில் 169 பெயர்கள் கொண்ட புதிய பெயர்ப் பட்டியலை இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டது. 13 நாடுகளிலிருந்தும் 13 பெயர்கள் அனுப்பப்பட்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தது.
நாடுகளின் பெயர்கள் ஆங்கில அகரவரிசையின்படி வரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பெயர் தெரிவுசெய்யப்பட்டு, இப்பிராந்தியத்தில் ஏற்படும் சூறாவளிகளுக்கு சூட்டப்படும். பெயர்களை உச்சரிக்க வேண்டிய முறையையும் அந்தந்த நாடுகளே தெரிவிக்க வேண்டும்.
இப்பட்டியலில் முதலாவதாக, பங்களாதேஷின் நிஸ்காரா பெயர் இடம்பெற்றது. 2 ஆவதாக இந்தியாவின் காட்டி இடம்பெற்றது. ஈரான் சமர்ப்பித்த நிவார் என பெயர் 3 ஆவது சூறாவளிக்கு சூட்டப்பட்டது. இதற்கு அடுத்து , 4 ஆவதாக மாலைதீவின் புரெவி எனும் பெயர் இடம்பெற்றது. இதற்கு அடுத்து வருடம் சூறாவளிக்கு மியன்மார் தௌ டே எனும் பெயர் சூட்டப்படும்.
அதற்கு அடுத்ததாக, ஓமானின் யாஸ், பாகிஸ்தான் குலாப், கத்தாரின் சஹீன், சவூதி அரேபியாவின் ஜவாத், இலங்கையின் அசானி, தாய்லாந்தின் சீட்ராங், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மண்டோஸ், யேமனின் மோச்சா ஆகிய பெயர்கள் உள்ளன. இப்பெயர்களின் பின்னர், பங்களாதேஷ் சமர்ப்பித்த பிபோர்ஜோய் எனும் பெயர் உள்ளது.