பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி மற்றும் அபிராமி இவர்களிடம் எல்லைமீறி பழகியதாகவும், அவரது பல சர்ச்சைக்குரிய காட்சிகள் பிரபல ரிவி வெளியிடாமல் எடிட் செய்து காட்டுகின்றது என்ற தகவல் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ரிவியைச் சேர்ந்த பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் எப்படியாவது கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி, அனந்த வைத்தியநாதன் கலந்து கொண்டனர்.
தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி மூலம் பிரபலமானவர் கவின், குறித்த ரிவிக்கு வேண்டப்பட்டவர் என்றும் அவரது பல லீலைகளை பிரபல வெளிக்கொண்டு வரவில்லை என்ற சர்ச்சைப் பேச்சு எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற நாளிலிருந்து கவின் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் சற்று முகம்சுழிக்கவே வைத்து வருகின்றது. காரணம் முதலில் காதலைக் கூறிய அபிராமியை ஒதுக்கிவிட்டு, சாக்ஷியைக் காதலித்தார். அதன்பின்பு லொஸ்லியாவை பார்த்ததும் அவரது பீலிங்ஸ் அவரது பக்கம் திரும்பிவிட்டது.
இதனால் லொஸ்லியா, கவின், சாக்ஷி மூவருக்குள்ளும் பயங்கர சண்டை ஏற்பட்டது அனைவருக்குமே தெரிந்த விடயமே…
பிக்பாஸ் எடிட்டராக இருக்கும் சகோதரர் ஒருவருக்கு உதவியாளராக இருக்கும் மகேஷ்வரன் என்பவர் பல ரகசியங்களை தற்போது அவிழ்த்து விட்டுள்ளார். இவர் கூறியது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல ரிவியிக்கு கவின் வேண்டப்பட்டவர் என்பதால் அவர்கள் கவின் பெண்களிடம் மிஸ் பிகேவியர் செய்யும் காட்சிகளை எடிட் செய்து போடச் சொல்வதாகவும், கவின் சாக்ஷிக்கு லிக் லாக் முத்தம் கொடுத்துள்ளதாகவும், அபிராமிக்கு இரண்டு முறை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை ஒருமுறை சேரன் அவதானித்ததாகவும் பின்பு கவினை அழைத்து எச்சரித்ததாகவும் குறித்த நபர் கூறியுள்ளார். மகேஷ்வரன் கூறியுள்ளதில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் கவினின் நடவடிக்கை சற்று முகம்சுழிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது என்பது பார்வையாளராகிய மக்களுக்கு நன்கு தெரிந்த விடயமே…