பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சாக்ஷியின் சுயரூபம் தெரியாமல் கவின் அவரை காதலித்து வந்தார். பின்பு லொஸ்லியாவிடம் பழக ஆரம்பித்தார்.
இதனால் லொஸ்லியா, கவின், சாக்ஷி மூன்று பேரும் போர்க்களம் போல் காட்சியளித்தனர். அதன்பின்பு ஏராளமான சண்டைகள் அரங்கேறியது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் கவின் பிக்பாஸ் வீட்டை வெளியே செல்லப்போவதாக பிடிவாதம் கூறி வந்தார்.
பின்பு கமல் வந்து ஓரளவிற்கு சமாதானப்படுத்தியது மட்டுமின்றி, சிலரது முகமூடிகளை வெளிச்சம் போட்டு காட்டினார். அதன் பின்பு சாக்ஷியிடம் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திய கவின் தற்போது லொஸ்லியாவுடன் மிகவும் நெருங்கி பழகி வருகின்றனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக சாக்ஷி இந்த வாரம் ஓபன் நாமினேஷனில் கவினை நாமினேட் செய்துள்ளார். தற்போது லொஸ்லியா சமையலறையில் சாண்டி, முகேன், தர்ஷன் ஆகியோருடன் நின்றுகொண்டு நடனமாடிக்கொண்டிருக்கிறார். நாமினேட் செய்யப்பட்ட குரூப்பான ரேஷ்மா, சாக்ஷி, மது இவர்கள் கூடி பேசுகின்றனர். அப்பொழுது லொஸ்லியாவை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
BB3 Unseen Clip Day36 (3/7) pic.twitter.com/WKev6Q6Jp7
— AwwHacker (@AwwHacker) July 30, 2019