Wednesday, October 21, 2020
Home ஜோ‌திட‌ம் சனி பெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

சனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம்.

மேஷ லக்னகாரர்களுக்கு சனிபகவான் 10 மற்றும் 11ஆம் வீட்டு அதிபதி. தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம். கர்ம ஸ்தான அதிபதி கர்ம ஸ்தானத்தில் அமரப்போகிறார். பத்தாம் வீட்டில் அமரப்போகும் சனிபகவானின் பார்வை 12ஆம் வீடு 4ஆம் வீடு ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. அப்போ இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் இடமான பத்தாம் பாவகம் 12ஆம் பாவகம், சுக ஸ்தானமான நான்காம் பாவகம் ஏழாம் பாகவம் என நான்கு வீடுகளைப் பற்றியும் நாம கவனிக்கணும். தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரும் சனியால் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.

ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. மேஷ லக்னகாரர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக இருக்கும். அறிவாளி என்று பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு சனிபகவான் தனது வீடான மகர லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது மேஷ லக்னத்திற்கு பத்தாம் பாவகம்.

- Advertisement -

பத்தாம் பாவகம் நம்முடைய ஒவ்வொரு செயலும் எப்படி நடக்கும் என்ன நடக்கும் என்று சுட்டிக்காட்டும் இடம் . பதினோராம் பாவம் சந்தோஷம், லாபம் பற்றி உணர்த்தும் இடம். எனவே சனிபகவான் தான் இருக்கும் வீடுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். எப்பவுமே தங்களின் ஆசை அபிலாஷைகளைப் பற்றி மேஷ லக்னகாரர்கள் வெளியில் சொல்லக்கூடாது பெருமை பேசக்கூடாது. கண்டுபட்டுவிடும். மேஷ லக்னகாரர்களுக்கு கர்ம ஸ்தானம் அதிபதி சனிபகவான்.

- Advertisement -

சனிபகவான் நீதிமான்

சனிபகவான் எந்த வீட்டில் இருக்கிறாரோ, எந்த பாவகத்தை பார்க்கிறாரோ அதற்கேற்ப பலன்களைத் தருவார். சனிபகவான் நீதிமான். நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு ஏற்ப பலன்களைத் தருவார். பத்தாம் வீடு தொழில் ஸ்தானம் என்பதால் நாம் செய்யும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். முதலாளிகளை ஏமாற்றினாலே வேலை செய்யும் இடத்தில் தப்பு செய்தாலோ அதை கண்டிப்பாக காட்டிக்கொடுத்து விடுவார் சனிபகவான். தப்பு பண்றவங்க தண்டனை அனுபவித்துதானே ஆகணும். அதனால் நேர்மையாக நடத்துக்கிட்டா எந்த தண்டனையும் கிடைக்காது.

உடம்பை கவனிங்க

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலையை கொடுப்பார். அரசு வேலைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும். உடம்ப கவனிக்கலைன்னா அப்போ நோயில படுக்கணும். அதனால் சின்ன பிரச்சினை வந்தாலும் உடனே டாக்டர்கிட்ட போங்க.

நிம்மதியான தூக்கம்

தொழில் ஸ்தானத்தில இருக்கிற சனிபகவான் லாபத்தை தருவதோடு வருமானத்தையும் அதிகரிப்பார். அதே போல சனிபார்வை விழும் 12 ஆம் வீடு அயன சயன ஸ்தானம் ஆக்டிவேட் ஆகும். வெளிநாடு போகும் யோகம் கிடைக்கும். நமக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கம் பற்றியும் இந்த இடம் சொல்லும். படுக்கை சுகம் பற்றியும் இந்த இடம் உணர்த்தும் இடம். இந்த சனிப்பெயர்ச்சியால் நீங்க வெளிநாடு முயற்சி செய்யலாம். பாஸ்போர்ட் விசா கிடைக்கும். தூக்க குறைபாட்டினால் உடலில் சோர்வும் அசதியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பெருமை பேசாதீங்க

அதே போல நான்காம் பாவகம் சுக ஸ்தானம். வீடு, வண்டி வாகனம் சொத்து சேர்க்கை பற்றி சொல்லும் இடம். அம்மா ஸ்தானம், தாயின் உடல் நலம் பற்றியும் உணர்த்தும் இடம். இந்த இடத்தை சனிபகவான் பார்வையிடுவதால் நாம் எப்போதுமே நம்முடைய வீடு பற்றியும் நம்முடைய அம்மாவின் உடல் நலத்தின் மீதும் அக்கறை கொள்ளவேண்டும். எனவே நம்முடைய வீடு பற்றி நாம் பெருமையாக சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவ்வளவுதான் பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும். வீடே நிம்மதி இழக்கும். எனவே நமக்கும் கிடைக்கும் சந்தோஷத்தை நாம் பெருமையாக வெளிப்படுத்தக்கூடாது. அம்மாவோட உடல் நலத்தில அக்கறை செலுத்துங்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சிலருக்கு வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு சுபகாரியங்கள் நடக்கும்.

காதல் திருமணம்

சனிபகவான் தனது பத்தாம் பார்வையால் உங்க லக்னத்திற்கு ஏழாம் பாவகத்தை பார்க்கிறார் அது உங்கள் களத்திர ஸ்தானம். நீங்க காதலிக்கலாம் அதைப்பற்றி யாரிடமும் பெருமை பேசாதீங்க. அப்படி பெருமையாக சொன்னால் அதை கெடுத்து விட சிலர் பார்ப்பார்கள். திருமணம் கைகூடும் வரை எதைப்பற்றியும் மூச்சு விடாதீர்கள். கணவன் மனைவி உறவு சந்தோஷமாகவே இருக்கும். நாங்க ஆதர்ஷ தம்பதிகள் என்று எதையும் வெளிப்படையாக சொல்லாதீர்கள். எல்லோர் மனசும் நல்லமனசாக இருக்காது எதையாவது பிட்டைபோட்டு பிரிச்சு விட்டுருவாங்க. சுப செலவுகள் அதிகரிக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சந்தோஷங்கள் அதிகமாகவே கிடைக்கும். நாம் நல்லது செய்வோம் நல்லதே நடக்கும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -
mglitzmedia web development sri lanka copy - mglitzmedia pharmacy software sri lanka copy - graphics design sri lannka -

ஏனைய செய்திகள்

உங்கள் குருதியின் வகை என்ன ….! இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…!

O வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…

கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…

இன்றைய ராசிபலன் – 19.10.2020

மேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...

தலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...

பிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…

வத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா

வத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software