2018 ஆம் ஆண்டு உயர் பதவிகளில் அதிக பெண்களை நியமித்ததற்காக பாரிஸ் நகர அதிகாரிகளுக்கு பிரான்சின் பொது சேவை அமைச்சகம் அபராதம் விதித்துள்ளது.
இந்த பணி நியமனங்கள் பாலின சமநிலையை பராமரிக்க நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறுகின்றன என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
2013 விதியின் படி, ஒரு பாலினத்தவரை உயர் பதவிகளுக்கு 60% க்கும் அதிகமாக நியமிக்க முடியாது.
இந்த விதி உள்ளூர் சேவையில் உயர் பதவிகளுக்கு பெண்களுக்கு சிறந்த அணுகலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.
2018 ஆம் ஆண்டில் உயர் பதவிகளுக்கு 11 பெண்கள் மற்றும் 5 ஆண்களை நியமித்ததற்காக பாரிஸ் உள்ளூர் அரசாங்கத்திற்கு 90,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் அபத்தமானது, நியாயமற்றது, பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது என்று பாரிஸ் மேயர் Anne Hidalgo செவ்வாயன்று நகர சபைக் கூட்டத்தில் கூறினார்.
ஆமாம், நாங்கள் பெண்களை உறுதியுடனும், வீரியத்துடனும் ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினையில் பிரான்ஸ் இன்னும் பின்தங்கியிருக்கிறது என Anne Hidalgo கூறினார்.
தற்போது, பாரிஸ் நகரின் உயர் பதவிகளில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களில் சுமார் 47% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 ஆம் ஆண்டில் விதி மீறலில் ஈடுபட்டதற்காக பாரிஸ் உள்ளூர் அரசாங்கத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதை பிரான்சின் பொது சேவை அமைச்சர் Amelie de Montchalin-ன் உறுதிப்படுத்தினார்.
இந்த அபத்தமான விதி 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது என Amelie de Montchalin கூறினார்.
பொது சேவையில் பெண்களை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக பாரிஸ் 2018 ஆம் ஆண்டில் விதி மீறலில் ஈடுபட்டதற்கான அபராதத்தை செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இந்த விவகாரம் பற்றி விவாதிக்க அமைச்சகத்திற்கு வருமாறு பாரிஸ் மேயருக்கு பிரான்சின் பொது சேவை அமைச்சர் Amelie de Montchalin அழைப்பு விடுத்துள்ளார்.