இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி திருமணத்திற்கு முன்பு விதித்த நிபந்தனை குறித்து தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானி, இந்தியாவின் முக்கியமான தொழிலதிபராக திகழ்கிறார். இவரின் மனைவி நீதா அம்பானியும், ஐ.பி.எல் கிரிக்கெட் மூலமாக தொழிலதிபராக பிரபலமானார்.
நீதா அம்பானி சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது இளம் வயதில் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். மேலும், முறைப்படி நடனம் பயின்றவரான நீதா, அரங்கேற்றங்களையும் செய்துள்ளார்.
இதுகுறித்து நீதாவிடமும் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானியும், நீதாவும் அறிமுகமாகியுள்ளனர். ஒருமுறை முகேஷ் தனது காரை விட்டு விட்டு, நீதாவுடன் பேருந்தில் பயணம் செய்தது அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
எனினும் முகேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி, நீதாவிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதற்கு நீதா, தன்னை திருமணம் செய்துகொள்ள நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
தற்போது பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் தாம், திருமணத்திற்கு பிறகும் அப்பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார். முகேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய நீதா, பின்னர் தனது பொறுப்புகளை உணர்ந்து, அப்பணியை விட்டு கணவரின் குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தொழிலதிபராக கோலோச்சி வரும் நீதா அம்பானி, ஆசிரியராக பணியாற்றியபோது வாங்கிய சம்பளம் ரூ.800 என்பது குறிப்பிடத்தக்கது.