Thursday, April 9, 2020
செய்திகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி.. முதன் முறையாக மனிதர் மீது பரிசோதனை.. ஆராய்ச்சியாளர்களின் தகவல்!

கொரோனா வைரஸ் தடுப்பூசி.. முதன் முறையாக மனிதர் மீது பரிசோதனை.. ஆராய்ச்சியாளர்களின் தகவல்!

அண்மைய செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் மனிதர் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் இன்று கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

காய்ச்சல், சளி, தொண்டை வலி என மழை, குளிர் காலங்களில் வரும் உடல்நல பாதிப்புகள்தான் இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்.

ஆனால், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தினால், கொரோனா மனித உயிரையே குடித்துவிடுகிறது என்பதுதான் மனித சமூகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள விஷயம்.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனமும், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் செயல்படும் கேம்பிரிட்ஜின் மாடெர்னா என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. நார்வே நாட்டை சேர்ந்த CEPI என்ற ஆராய்ச்சி அறக்கட்டளையும் இதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளது.

mRNA-1273 எனக் குறிப்பிடப்படும் இந்த தடுப்பூசி மருந்தினுடைய சக்தி, கொரோனா வைரஸை முறியடிக்கும் திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்த மனிதர்கள் மீதான பரிசோதனை தொடங்கியுள்ளது.

தடுப்பூசி பரிசோதனைக்கு தாங்களாக முன்வந்த 18 முதல் 55 வயது நிரம்பிய ஆரோக்கியமான 45 பேரை தேர்வு செய்து, 6 வாரங்களுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. சியாட்டில் நகரில் நடைபெற்று வரும் இந்த பரிசோதனை திட்டத்தில் பங்கேற்றுள்ளவர்களில் முதலில் ஒருவருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. 43 வயதான ஜெனிபர் ஹேலர் என்ற பெண்ணுக்கு கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி போடப்பட்டது. இவர் இரு குழந்தைகளுக்கு தாயாவார்.

மேலும், முதல் கட்ட பரிசோதனை என்பது சாதனை வேகத்தில் தொடங்கியுள்ளதாகவும், விரைவாக தடுப்பூசி மருந்தை நடைமுறைக்கு கொண்டுவருவதே நோக்கம் என அமெரிக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால், உலக மக்களின் உயிரை காக்கும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி பரவலாக சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன தான் மனிதர்கள் மீதான கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கி விட்டாலும், பாதுகாப்பானதுதான் என உறுதிப்படுத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...
error: Content is protected !!