பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரனின் வீட்டில் பொலிசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிய சம்மந்தப்பட்ட அரசாங்க அமைச்சர்கள் மிகவும் மெதுவாக செயல்படுவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது குறித்து பிரான்ஸ் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றுநோயை அரசாங்கம் கையாளுவது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரான்சின் தற்போதைய மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர்கள்,முன்னாள் பிரதமர் எட்வார்ட் பிலிப் உட்பட பல முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வியாழக்கிழமை காலை சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரனின் வீட்டில் சோதனை நடவடிக்கைகள் ‘சிரமமின்றி’ நடந்ததாக சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க எங்களுடன் இணையுங்கள்…