நேற்று சனிக்கிழமை பிரான்சில் 5,453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல்களை இங்கே அழுத்துவதன் மூலம் படிக்கலாம்.
அதேவேளை, நேற்றைய நாளில் 23 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் தொற்று வலையங்கள் 1,374 ஆக அதிகரித்துள்ளது. இதில் 313 வலையங்கள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரான்சில் தற்போது 53 மாவட்டங்கள் தொற்று வலையங்கள் அதிகம் கொண்ட மாவட்டங்களாக உள்ளன.
மிதமான கொரோனா தொற்று மாவட்டங்கள்:
Ain, Ariège, Aude, Alpes-de-Haute-Provence, Aube, Bas-Rhin, Corse-du-Sud, Côte-d’Or, Drôme, Essonne, Gard, Gers, Haute-Garonne, Haute-Savoie, Hautes-Pyrénées, Ille-et-Vilaine, Isère, Eure-et-Loir, Loire-Atlantique, Lot-et-Garonne, Indre-et-Loire, Marne, Mayenne, Mayotte, Meurthe-et-Moselle, Moselle, North, Oise, Pyrénées-Atlantiques, Pyrénées-Orientales, Réunion, Maine-et-Loire, Seine-et-Marne, Tarn, Tarn-et-Garonne, Yvelines.
அதிகளவான கொரோனா தொற்று மாவட்டங்கள் :
Martinique, Guadeloupe (including Saint-Martin and St-Barthélémy), Alpes-Maritimes, Bouches-du-Rhône, Gironde, Guyane, Hauts-de-Seine, Hérault, Loiret, Paris, Rhône, Sarthe, Seine-Saint- Denis, Val-de-Marne, Val-d’Oise, Var, Vaucluse
ஆகிய 53 மாவட்டங்கள் உள்ளன.
இந்த மொத்த மாவட்டங்களில் இல் து பிரான்சுக்குள் உள்ள அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.