Thursday, June 4, 2020
Home செய்திகள் இந்தியா கொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி!

கொரோனாவிடம் இருந்து தப்பிய வயது முதிர்ந்த ஜோடி!

கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியில் வசித்து வந்த தம்பதியரான தாமஸ் ஆபிரகாம் (வயது 93), மரியம்மா (88) தம்பதியருக்கும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய மகன், மருமகள், பேரன் மூலம்தான் தாமஸ் ஆபிரகாம், மரியம்மா தம்பதியருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

ஏற்கனவே மகன், மருமகள், பேரன் ஆகிய மூவரும் குணம் அடைந்து விட்டனர்.

- Advertisement -

வயதான நிலையிலும் கொரோனா வைரஸ் பாதித்தாலும் துவண்டுபோகாத இந்த தம்பதியர் கோட்டயம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

தற்போது பூரண குணம் அடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர்.இந்த அதிசய தம்பதியரை அனைவரும் வியப்புடன் பார்க்கும் நிலை வந்துள்ளது.

இந்த தம்பதியர் கொரோனா வைரசில் இருந்து மீண்டு இருப்பது குறித்து அவர்களது பேரன் ரிஜோ மோன்சி கூறுகையில், “எங்கள் தாத்தாவும், பாட்டியும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்ததால்தான் கொரோனா வைரசில் இருந்து மீண்டு வர முடிந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தாத்தாவிடம் மது, பீடி, சிகரெட், புகையிலை என எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கமும் கிடையாது. எந்த விதமான உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லாமலேகூட அவருக்கு ‘சிக்ஸ் பேக்’ உடல் அமைப்பு இருந்தது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து அவர்கள் உயிர் பிழைத்தது அதிசயம்தான். அவர்களை காப்பாற்றுவதற்கு டாக்டர்களும், மருத்துவ பணியாளர்களும் தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்தார்கள்.

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கேரள மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தாத்தாவுக்கு பழங்கஞ்சியும், தேங்காய் சட்னியும்தான் பிடித்த உணவு. ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தபோது கூட அந்த உணவைத்தான் தாத்தா கேட்டார். மரவள்ளிக்கிழங்கும், பலாப்பழமும்கூட பிடிக்கும். பாட்டிக்கு மீன்தான் பிடித்தமான உணவு.

நாங்கள் இத்தாலியில் இருந்து எப்போது வருவோம் என்று தாத்தாவும், பாட்டியும் காத்திருந்தார்கள்.

இப்போது அவர்கள் எப்போது வீட்டுக்கு வருவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமான பழக்க வழக்கம் தான் இந்த கேரள தம்பத்தியினர் வீடு திரும்ப காரணம். எனவே முடிந்த அளவு நாமும் எம்மையும் எம்மை சுற்றியுள்ள சூழலினையும் ஆரோக்கியமாக வைத்திருப்போம்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...

நடிகை குஷ்புவா இது? இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு! கிரங்கிப் போன...

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...

நடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?.. உறுதி செய்த...

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..?

குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline