Sunday, April 5, 2020
ஜோ‌திட‌ம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகர ராசிக்காரர்களே!.. வருமானத்திற்கு குறைவில்லாமல் இனி பணமழைதானாம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மகர ராசிக்காரர்களே!.. வருமானத்திற்கு குறைவில்லாமல் இனி பணமழைதானாம்!

அண்மைய செய்திகள்

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மகரம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வரும் குருபகவானால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம் எப்படி என்று பார்க்கலாம்.

‘வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்’ என்பது பழம் பாடல். மகரம் ராசிக்கு குரு யோகக்காரன் அல்ல அவர் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு வருகிறார். மகரம் ராசிக்கு ஏழரை சனி அதுவும் விரைய சனி நடக்குது. இப்போ குருவும் சனி கேது உடன் 12ஆம் வீட்டிற்கு வருவது விபரீத ராஜயோக காலம்.

12க்கு அதிபன் 12ல் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலம். உங்க 12ஆம் வீட்டில் சனி அமர்ந்ததால் அதிக விரையம் ஏற்பட்டது. இனி அந்த வீட்டிற்கு குரு வரும் காலத்தில் இதுநாள் வரை ஏற்பட்ட இழப்புகளை தடுப்பார். விரையங்களை பசிஸ்டிவ் ஆக கொடுப்பார். சுப பயணங்கள், சுப விரையங்களை தருவார். வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்குவார்.

குருவை வரவேற்போம்

குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து 12ஆம் வீட்டுக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டும். உடல் நலப்பிரச்சினைகள் இருந்தன. அதிக கடன் பெற்றீர்கள். உடல் நலக்குறைகள், நோய்கள் ஏற்பட்டது. கவலைகள் அதிகமாக இருந்தது. இனி துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

நன்மைகள் நடைபெறும்

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். 12ஆம் வீட்டில் அயன ஸ்தயனத்தில் அமர்ந்த ராசி அதிபதி சனி அமர்ந்து முடக்கிப் போட்டார். இனி குரு அங்கு வருவதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட தீமைகளை குறைப்பார். நோய்களை கூட அடையாளம் காண முடியாமல் தவித்த உங்களுக்கு நோய் பாதிப்புகள் சரியாகும். நிவாரணம் கிடைக்கும்.

வீடு வண்டி வாங்கலாம்

நான்காம் வீட்டை பார்ப்பதால் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். விடு கட்டும் யோகம் உருவாகும். சொந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நாலாம் பாவம் சுக ஸ்தானம். வீடு மனை தாயார் வாகன சுக ஸ்தானம். குருவின் பார்வையால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும்.

நோய்கள் தீரும் காலம்

குரு ஆறாம் வீட்டை பார்ப்பதால் வியாதிகளை போக்குவார். ஆயுள் கண்டம் இருந்தவர்களுக்கு அந்த கண்டங்கள் விலகுகிறது. வயிறு சார்ந்த பிரச்சினை விலகும். உடல் நலமடையும் காரணம் பொன்னவன் பார்வையால் விலகும். கடன்களை அடைக்க குரு வழிகாட்டுவார். வருமானம் பெருகும். நல்ல வேலை வாய்ப்பு பெருகும். ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியமால் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும்.

பகை விலகும் பணம் வரும்

6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய் நொடி சிக்கு பிணி கேடுகள் மறையும். மருந்து மாத்திரை ஆஸ்பத்திரி செலவுகள் விலகும்.உத்தியோகம் சம்பந்தமாக கோர்ட் வழக்குகள் இருந்தால் சாதகமாக தீர்ப்பால் இதுவரை கிடைக்க வேண்டிய பணம் கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள்.

சொத்துக்கள் வாங்குவீர்கள்

ராசிக்கு 8 ஆம் வீட்டை குரு பார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் 8ஆம் பாவம் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு. கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம் கூடி வருகிறது. பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலை இனி மாறும். பணம் கையிருப்பு அதிகமாக சேரும்.

குருவை வழிபட பிரச்சினை தீரும்

கார் வாங்கும் யோகம் வரப்போகிறது. வயிறு பிரச்சினை பெண்களுக்கு தீரும். நல்ல வேலை கிடைக்கும். சுமூகத்தீர்வு கிடைக்கும். சண்டை போட்டவர்கள் சமாதானம் ஆவீர்கள் குருபகவான் வழிபாடு அவசியம். நல்லா தூங்குவீர்கள். உடல் நல கவலைகள், மன கவலைகள் தீரும். இதுநாள் வரை இருந்த தடைகள் விலகி அருமையான சூழ்நிலை உருவாகும். தென்குடி திட்டை போய் வழிபடுங்கள். யானைக்கு வாழைப்பழம் வாங்கி கொடுத்து ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. வியாழக்கிழமை பெருமாள் வழிபாடும் முருகப்பெருமான் வழிபாடு செய்வதும் நல்லது

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...
error: Content is protected !!