Sunday, April 5, 2020
ஜோ‌திட‌ம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீன ராசிக்காரங்களே அதிர்ஷ்டத்தைப் பாருங்க! ஆடிப்போயிடுவீங்க

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: மீன ராசிக்காரங்களே அதிர்ஷ்டத்தைப் பாருங்க! ஆடிப்போயிடுவீங்க

அண்மைய செய்திகள்

குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மீனம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து ஜீவன ஸ்தானத்திற்கு வரும் குருபகவானால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம் எப்படி என்று இருக்கும் பார்க்கலாம்.

‘ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும் என்பது பழம்பாடம். குரு பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். மீனம் ராசிக்கு குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். உங்கள் ராசி நாதனும் பத்தாம் அதிபதியுமான குருபகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார் பத்தாம் வீட்டில் அமர்ந்தாலும் அதிக நன்மை செய்வார். மீன ராசிக்கு ஹம்ச யோக காலம். பத்தில் குரு புதிய பதவி தேடி வரும் பத்தில் குரு வரும் போது உயர்பதவிகள் தேடி வரும். வாழ்க்கை ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தொழிலில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அஞ்ச வேண்டாம். ஆளுமை தன்மையை அதிகரிப்பார். சகல ஹம்சத்தையும் தருவார்.

மீன ராசிக்கு பதவி உயர்வு

பத்துக்கு அதிபனே பத்தில் இருப்பதால் பதவி உயர்வை தருவார். தனுசு வீடு ஆட்சி வீட்டில் இருப்பதால் தனித்தன்மை வாய்ந்த பார்வைகளை தருவார். வீழ்ச்சியில் இருந்தவர்களை உச்சத்திற்கு கொண்டு வருவார். கெடுதல் நடக்காமல் தடுப்பார். 9,10, 11 ஆகிய இடங்களில் குரு அமரும் காலத்தில் சுபமே நடக்கும் நல்ல பலன்களை வாரி வழங்குவார். அதை தவிர ஒரு கிரகம் தன்னுடைய வீட்டிற்கு கெடுதல் செய்யாது. உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கேது ஞானகாரகன் கேது உடன் இணையும் குரு பகவான் நன்மைகளை செய்வார். வாழ்க்கையில் கவுரவம், புகழ் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

குருவின் பார்வை தன வாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது விழுகிறது. குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம். தன ஸ்தானத்தை பார்ப்பதால் தன வருமானம் வரும்பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். திருமண தடைகள் நீங்கும். புதிய வருமானத்தை அதிகரிப்பார். இதுநாள் வரை வராமல் இழுத்தடித்த வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும்.

வேலையில் உற்சாகம்

நான்காம் வீட்டை பார்ப்பதால் சொத்து சுகம் பிரச்சினை தீரும் தொட்டில்கள் ஆடும் சத்தம் கேட்கும். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளை இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு குரு பகவான் பிள்ளை வரம் தரப்போகிறார். சொத்து சுகம் சேரும் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும், வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குருவின் பார்வையால் பிரச்சினைகளை கஷ்டங்களை நிவர்த்தி செய்வார்கள். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வேலையில் ஏற்றமிகு பயணத்தை தருவார். அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கூடி வரும்.

உடலை வாட்டிய நோய்கள் நீங்கும்

தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நிங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். செய் தொழில் வளர்ச்சி பெறும். வேலை இழந்தவர்களுக்கு திரும்ப வேலை கிடைக்கும். நல்ல மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த முன்னேற்றம்.

பைரவர் வழிபாடு அவசியம்

உடல் நலத்தில் பிரச்சினைகள் வரும் மருத்துவ ஆலோசனை அவசியம். குருபகவான் சனி கேது உடன் இணைந்திருக்கும் போது சிலருக்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். பைரவர் வழிபாடு மிகவும் அவசியம். சனி கேது இருக்கும் போது சிக்கல்கள் வரும் கூடவே குருவும் அமரும் காலத்தில் வரும் பிரச்சினைகள் தீர ஆன்மீக எண்ணங்கள் அவசியம். வீடுகளில் வேலை செய்யும் இடத்தில் ஆன்மீக அலை வீசட்டும். மகான்கள் சித்தர்களை வழிபடுங்கள்.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...
error: Content is protected !!