குடும்பத்தில் அடுத்தடுத்து மரணங்களை சந்தித்த பிரித்தானியர் ஒருவர், வேட்டையாடும் ஒருவரால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
பிரான்சிலுள்ள La Garrigue என்ற இடத்தில் வாழ்ந்துவந்தவர் Morgan Keane (25). சில ஆண்டுகளுக்கு முன் Morganஉடைய தாய் இறந்துபோக, அவரது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
தாயையும் தந்தையையும் அன்பாக கவனித்துக்கொண்ட Morgan, அவர்களது மரணப்படுக்கையில் அவர்கள் கூடவே இருந்து அவர்களை கடைசி வரை அன்புடன் கவனித்துக்கொண்டாராம்.
Morganக்கு 21 வயதுடைய ஒரு தம்பி மட்டுமே இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், வீட்டை விட்டு வெளியே வந்த Morganஐ காட்டுப்பன்றி என்று எண்ணி, வேட்டைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடனடியாக உயிரிழந்துள்ளார் Morgan. துப்பாக்கியால் சுட்ட 33 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வேட்டையை நிறுத்தவேண்டும் என்று கோரி, Morganஉடைய நண்பர்கள் உட்பட சிலர் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.