பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே மனைவியுடன் இணைவதற்காகதான் போட்டிக்கு வந்ததாக நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காதல் மன்னன் பட்டம் சரியாக யாருக்கு பொருந்தும் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, உண்மையான காதல் மன்னர் தாடி பாலாஜிதான், அவரின் மனைவி நித்தியாவுடன் இணைய வேண்டும் என்று அவரை சுற்றியே வருவதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு நித்தியா அதிர்ச்சியடைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இருவரும் ஒன்றிணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பிக்பாஸ் டாஸ்க்குகள் கூட இவர்களை இணைப்பதற்காகவே எழுதப்பட்டது போலவே இருக்கின்றது. பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை..

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here