நடிகர் மகத் அவரின் காதலி பிராச்சி மிஸ்ராவை இன்று திருமணம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
துபாயில் நடந்த விழா ஒன்றில் சந்தித்துக் கொண்ட இவர்கள், நண்பர்களாகி பின் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இவர்கள் காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு காதலில் விழுந்த கதையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மகத்.
அதில், இந்தக் காதல் எப்படி தொடங்கியது என்று தெரியாது. என் வாழ்க்கையில் நீ வந்தபின் எல்லாம் சிறப்பாக மாறி இருக்கிறது.
உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ரசிக்கிறேன். முன்னால் இருக்கும் நமக்கான எதிர்காலத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். நன்றி என்று தெரிவித்திருந்தார்.
இவர்களின் காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.