Sunday, January 24, 2021
Home செய்திகள் காட்டுப்பன்றி என நினைத்து வேட்டைக்காரார் சுட்டதில் பிரித்தானியர் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்!

காட்டுப்பன்றி என நினைத்து வேட்டைக்காரார் சுட்டதில் பிரித்தானியர் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்!

பிரித்தானியர் ஒருவர் வேட்டைக்காரர் ஒருவரால் தவறாக சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான செய்தியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள La Garrigue என்ற இடத்தில் வாழ்ந்துவந்தவர் Morgan Keane (25). சில ஆண்டுகளுக்கு முன் Morganஉடைய தாய் இறந்துபோக, அவரது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.

Morganக்கு 21 வயதுடைய ஒரு தம்பி மட்டுமே இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், வீட்டை விட்டு வெளியே வந்த Morganஐ காட்டுப்பன்றி என்று எண்ணி, வேட்டைக்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

- Advertisement -

குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடனடியாக உயிரிழந்துள்ளார் Morgan. Morgan ஒரு பிரித்தானியர் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

- Advertisement -

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg5fce6ea493609 -

இந்நிலையில், Morganஉடைய நெருங்கிய நண்பர் ஒருவர், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் Morgan ஒரு பிரித்தானியரே அல்ல, அவர் பிரெஞ்சுக் குடிமகன் என்று கூறியுள்ளார்.

Morganஉடைய குடும்ப நண்பரான Lillian Bell என்னும் பெண்மணி, Morgan தன் மகனான Michaelஇன் நெருங்கிய நண்பர் என்றும், உண்மையில், தான் அவருக்கு கற்றுக்கொடுத்த சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர அவருக்கு ஆங்கிலம் கூட தெரியாது என்றும் கூறியுள்ளார்.

Morganஉடைய தந்தை அயர்லாந்து நாட்டவர், அவ்வளவுதான், மற்றபடி அவர் பிரான்ஸ் நாட்டவர் என கூறியுள்ளார் அவர்.

இதற்கிடையில், Morganஐ துப்பாக்கியால் சுட்ட Aveyronஐச் சேர்ந்த 33 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் ஒருவர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software