காட்டுப்பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை Strasbourg நகரில் உள்ள Vendenheim எனும் காட்டுப்பகுதியில் வைத்து இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. 25 வயதுடைய குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டு, காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கொல்லப்பட்ட இப்பெண், கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை அவரது சடலம் மீட்க்கப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு, அப்பெண்ணின் முன்னாள் கணவரும், பிறிதொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 23 ஆம் திகதி, இப்பெண் காணாமல் போயிருந்த அன்று, அவர் வசித்த வீட்டுக்கு வந்த அவரது முன்னாள் கணவர் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகிறது.
அதன் பின்னரே அவர் காணாமல் போயிருந்ததாகவும், வீட்டில் வைத்தே அவர் கொலை செய்யப்பட்டு, அதன் பின்னர் அவர் காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.