கொரோனா வைரஸ் பரவல் காரணத்தினால் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய பணியாளர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் கொடுத்து உள்ளார்.
இதனால் இவருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
#JanathaCurfew .. what I did today .. let’s give back to life .. let’s stand together.🙏🙏 #justasking pic.twitter.com/iBVW2KBSfp
— Prakash Raj (@prakashraaj) March 22, 2020
நான் சேர்த்து வைத்த பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தேன். எனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டேன்.
முடிந்த வரை நான் எல்லோருக்கும் உதவி செய்வேன். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்களும் உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள். அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கொரோனா வைரஸ் எனும் உயிர்க் கொள்ளியை எதிர்த்து போராடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பிரகாஷ்ராஜின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.