பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு வந்தால் இவர்கள் யாரும் அதில் கவனமாக இருப்பதில்லை என்று கடும் கோபமாக பேசினார்.
பின்பு கடந்த வாரம் லக்ஜுரி பட்ஜெட் மார்க் குறைந்தது பற்றி விளக்கப்படம் போட்டு லொஸ்லியா, கவினை தலைகுனிய வைத்தார்.
இதற்கு பின்பு இவர்கள் இருவரும் திருந்துவார்கள் என்று பார்த்தால் இல்லை என்று தான் கூற வேண்டும். சாக்ஷி வெளியேறிய பின்பு மிகவும் நெருக்கமாகிய இவர்கள், கமல் கண்டித்தும் கேட்காமல் நேற்று வரை காதல் மயக்கத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் மைக்கை ஆப் செய்துவிட்டு பேசியது குறித்து தயாரிப்பாளர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இவர் கவினை வைத்து ‘நட்புன்னா என்ன தெரியுமா’ என்ற படத்தினை தயாரித்த ரவீந்தர் பிக்பாஸ் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது இந்த விஷயம் குறித்து பேசிய அவர், மைக்கைக் கழட்டிவிட்டு இருவரும் சேரனை பற்றி பேசியிருக்கலாம் அல்லது இருவருக்கும் இடையே தனிப்பட்ட விடயத்தினைக் குறித்து பேசியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.