Fontainebleau (Seine-et-Marne) இலுள்ள, ஒரு இடுகாட்டில் உள்ள கல்லைறகள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளன. அறுபதிற்கும் மேற்பட்ட கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டு அதில் நாசிச் சின்னங்கள் அடையாளமிடப்பட்டுள்ளன.
Fontainebleau காட்டிற்கு அருகாமையில் இருக்கும், இந்த இடுகாடு, மிகவும் தனிமையாகவும், ஆள் நடமாட்டங்களற்ற பகுதியாகவும் உள்ளது.
இங்கு இருக்கும் யூதக் கல்லறைகளிலேயே, இந்த நாசி அடையாளங்கள் இடப்பட்டுள்ளன. பழைய கல்லறைகள், புதிய கல்லறைகள் என அறுபதிற்கும் மேற்பட்டவை சேதமாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே Melun நகரிலும் இதே போன்ற யூதக் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டு நாசிக் குறிகள் அடையாளமிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.