போப் பிரான்சிஸ் கத்தோலிக்க வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண்ணை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.
போப் பிரான்சிஸ் நேற்று பிஷப் சபைக்கு இரண்டு புதிய துணை செயலாளர்களை நியமித்தார். அதில், கத்தோலிக்க பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக, வரலாற்றில் முதல் முறையாக பிஷப் சபையின் (Synod Of Bishop) உயர் பதவிகளில் ஒரு பெண்ணுக்கு இடமளித்துளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிஸ்டர் Nathalie Becquart எனும் 52 வயது பெண்ணை பிஷப் சபையின் துணை செயலாளர்களில் ஒருவராக நியமித்துள்ளார்.
இதன்முலம், போப்பை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுரிமை முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த Xaviere Sisters குழுவில் உறுப்புணராக இருந்த Becquart, பாரிஸில் உள்ள புகழ்பெற்ற HEC வணிக கல்லூரியில் மேலாண்மைக்கான முதுகலை பட்டம் பெற்றுள்ளார். பின்னர் பாஸ்டனில் மேலும் உயர் படிப்புகள் படித்துள்ளார்.
சிஸ்டர் Nathalie Becquart 2019-ஆம் ஆண்டு முதல் மூத்த கத்தோலிக்க ஆலோசகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினாவில் பிறந்த போப் பிரான்சிஸ், சபையில் சீர்திருத்தவும், பெண்களையும், சாதாரண மக்களையும் தேவாலயத்தில் அதிக பங்கு வகிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை நிறைவேற்றினார். மேலும், சமீப காலங்களில் கத்தோலிக்க சபையில் பெண்களின் அளப்பரிய தொண்டுகளையும், அவர்களுக்கான உரிமை குறித்தும் வெளிப்படுத்திவருக்கிறார்.
புதிதாக நியமிக்கப்பட்ட துணை செயலாளர்களில் மற்றோருவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Luis Marin de San Martin ஆவார்.