நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கிறார். இயக்குனர் விஜய்யை விவாகரத்துக்குப் பின் படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார்.

அவரது நடிப்பில் வெளியான ராட்ஸ்சன் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் அவருடன் நடித்த விஷ்னு விஷால் சமீபத்தில் அவரது காதல் மனைவியை விவாகரத்து செய்தார். இதற்கு சிலர் அமலாபால் மற்றும் விஷ்னு விஷால் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியது.

ஆனால் இதனை விஷ்னு விஷால் தனது டுவீட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.

இந்நிலையில், புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி உள்ளது. அமலாவுக்கு இது புதிது அல்ல. ஏற்கெனவே திருட்டுப் பயலே 2 படத்திலும் தம் அடிப்பது போல நடித்தார். அந்தப் படத்தில் அமலா பால் தம் அடித்துக்கொண்டே புகையை மூக்கு வழியாக வெளியேற்றும் வீடியோ அனைவரையும் வியக்க வைத்தது.

இதனை கண்ட ரசிகர்கள் கணவரை பிரிந்து அமலாபால் இது போன்று செய்வதற்கதுதானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here