கஞ்சா புகைப்பவர்களுக்கு €200 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும் எனும் புதிய சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 1 ஆம் திகதியில் இந்த புதிய சட்டம் செயற்படும். அதன்படி, 10 கிராமுக்கு குறைவாக கொக்கைன் போதைப்பொருள் வைத்திருப்பவர்களும், 100 கிராமுக்கு கீழ் கஞ்சா போதைப்பொருள் வைத்திருப்பவர்களும் – அவர்கள் கைது செய்யப்படுவதற்கு பதிலாக, €200 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்படும்.
இந்த சட்டம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே பொருந்தும். தவிர குறித்த அளவுக்கு மீறி போதைப்பொருட்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு €3,750 வரை தண்டப்பணமும், ஒரு வருட சிறைத்தண்டனையும் கிடைக்கும். (இந்த சட்டம் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு அல்ல. சொந்த தேவைக்கு போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரம்)
முன்னதாக Rennes, Lille மற்றும் Marseille ஆகிய நகரங்களில் இந்த சட்டம் இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.