பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கல்லூரி படிக்கும் போது பேருந்தில் பெண்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதற்காகவே சென்றேன் என்று வெளிப்படையாக கூறிய சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
தற்போது அவர் சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனக்கு நிகழ்ந்த அநீதியைக் குறித்து அதிகமாக வேதனையடைந்துள்ளாராம்.
பிக்பாஸ் வீட்டில் சேரனுக்கு எதிராக புகாரளித்த மீராவை அதே வாரத்தில் வெளியேற்றிவிட்டு, சேரனுக்கு எந்தவொரு கலங்கமும் வராமல் காப்பாற்றியுள்ளனர். ஆனால் எனக்கு அவ்வாறு நடக்கவில்லை.
இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று சில வாரங்கள் இருந்துவிட்டு பணம் சம்பாதித்து வரலாம் என்று நினைத்துச் சென்ற எனது வாழ்வில் சூறாவளி ஏற்பட்டது இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்புவார்கள் என்று தெரிந்திருந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளாராம்.
தனது அப்பா காவல் அதிகாரி என்ற கர்வத்தினால் இவ்வாறு நடந்துவிட்டேன். ஆனால் தற்போது அவ்வாறு செயல்படும் இளைஞர்களை அவதானித்தால் எனக்கு கோபமாக வருகின்றது. என்னைப் போன்று யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு வெளிப்படையாக கூறினேன்.
நான் இதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டது வேதனை அளிக்கின்றது. மேலும் உள்ளே இருந்த சக போட்டியாளர்களை கூட சந்திக்காமல் அவர்களுக்கே தெரியாமல் வந்துவிட்டேன். அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.