சுவையான சூடான பஜ்ஜி, போண்டா என மாலையில் எண்ணெயில் பொறிக்கும் உணவுப்பண்டங்களுக்கு மயங்காதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள். ஆரோக்கியமான உணவு இல்லையென்றாலும், அதிகமானோர் விரும்பும் நொறுக்குத்தீனியாகவும், வீடுகளில் செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. அப்படி பஜ்ஜி முதல் சிக்கன் பகோடா வரை எதுவாக இருந்தாலும் எண்ணெயில் பொறித்து எடுக்கும்போது சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.
சூடான எண்ணெய்
உணவுப்பொருளை எண்ணெயில் போடுவதற்கு முன்பு, எண்ணெய் நன்றாக சூடாகியுள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். போதுமான சூடு இல்லாத எண்ணெயில் உணவுப்பொருளை பொறித்தால், அது அளவுக்கதிகமான எண்ணெயை ஈர்க்கும். அந்த உணவுப்பொருளை நீங்கள் சாப்பிடும்போது, ஒன்றிரண்டுக்கும் மேலாக சாப்பிட முடியாது.
மேலும், அதிக எண்ணெய் உடலுக்கும் மிக அதிக கேடுகளை விளைவித்துவிடும். இதனால், வெப்பமானியை பயன்படுத்தி எண்ணெய்யின் கொதிநிலை 350 முதல் 375 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெப்பமானி இல்லாத சமயத்தில் உணவுப்பொருளை மிக்ஸ் செய்து வைத்த மாவின் சிறு துளியை எண்ணெயில் போட்டுங்கள். 60 விநாடிகளில் பழுப்பு நிறமாக மாறினால், எண்ணெய் பொறிப்பதற்கு தயாராக உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
அதிகமான துண்டுகளை பொரிக்காதீர்கள்
ஒரே சமயத்தில் அதிகமான துண்டுகளை எண்ணெயில் போட்டு பொறித்தால், சரிவிகித அளவில் அனைத்து துண்டுகளும் வேகாமல் போக வாய்ப்ப உண்டு. ஒன்றிரண்டு துண்டுகள் வேகாமல் போவதை கண்டுபிடித்து அவற்றை தனியாக எடுத்து மீண்டும் பொறிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கும்.
கடாயின் அளவுக்கு ஏற்ப சிறு சிறு குழுவான உணவுப்பொருளை எண்ணெயில் பொறித்து எடுக்கும்போது, அந்த பொறித்த உணவு சமமான சுவையுடன் இருக்கும். அனைத்து உணவுப்பொருளையும் எண்ணெய்யில் போட்டு எடுப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆனாலும், சுவையும் மாறாது, கருகிபோகாமல் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும்.
அதிக எண்ணெய்
கடாயில் போட்டவுடன் துண்டுகள் தங்க நிறத்தில் மாறுவதை உங்களால் பார்க்க முடிந்தால், அவை நிச்சயம் எண்ணெய் அதிகமாக இருக்கும். அப்போது, எண்ணெய்யை உறிஞ்சும் தாள்களை பயன்படுத்தி, உணவில் இருக்கும் எண்ணெய்யை வடிக்கட்டி பிறகு சாப்பிடலாம். செய்தித்தாள்களை பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு தவிர்த்து விடுங்கள்.
எழுத்துக்களை அச்சிடுவதற்கு காரியம் பயன்படுத்தப்படுவதால், அவை உடலுக்குள் சென்று கல்லீரை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவசர கதியில் வெளியே செல்ல நேர்ந்தால் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, அடுப்பு அணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்த பிறகு வெளியேறுங்கள்.
சுத்தமான எண்ணெய்
பொறித்து தயாரிக்கப்படும் உணவுகளுக்கு சுத்தமான எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய்யை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சுத்தமான எண்ணெய்யை பயன்படுத்தும்போது, உங்கள் உணவின் சுவை மேலும் கூடும். பழைய எண்ணெய்களில் உணவுகளை பொறிப்பதை கட்டாயம் நிறுத்திவது உங்களின் உடல் நலனுக்கு சிறந்தது.
சிறிய துண்டு காய்கறிகள்
அதேபோல், எண்ணெயில் வதக்கும் காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், ஒரு சில நேரங்களில் பெரிய காய்கறி துண்டுகளின் உட்பகுதி வேகாமல் பச்சையாக இருக்கும். சிறிய துண்டுகளாக இருக்கும்போது முழுமையாக சமைக்கப்படுவதுடன், சுவையாக இருக்கும். முழுமையாக வேகாமல் பச்சையாக இருக்கும் காய்களை சாப்பிடும்போது, சுவை மோசமாக இருக்கும்.