பிரான்சில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 15ம் தேதி முதல் பிரான்ஸில் சினிமாக்கள், திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்களை மீண்டும் திறப்பதற்கு மற்றும் மக்கள் மாகாணங்களுக்கு இடையே பயணிக்கவும் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்க தேவைப்பட்டால் சில கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நிச்சயமாக நீடிப்போம் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்த்துவது குறித்து ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை மூத்த அமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
ஊரடங்கு எளிதாக்கப்படுவதற்கு முன்னர் ஒரு நாளைக்கு 5,000 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் தீவிர சிகிச்சையில் 3,000 க்கும் குறைவான கொரோனா நோயாளிகள் என எண்ணிக்கை குறைக்க பிரான்ஸ் ஜனாதிபதி இலக்காகக் கொண்டிருந்தார்.
நாடு முழுவதும் ஐ.சி.யுவில் உள்ள எண்கள் 3,000-க்கு மேல் உள்ளன, ஆனால் அவை தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றன.
இருப்பினும், தொற்றுநோய்கள் குறைவது மந்தை நிலையில் உள்ளது, உறுதிப்படுத்தப்பட்ட புதிய தொற்றின் எண்ணிக்கை செவ்வாயன்று 13,000-க்கு மேல் உயர்ந்துள்ளது.
புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைப்பது டிசம்பர் 15-க்குள் சாத்தியமில்லை என் சுகாதார அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.