ஐந்து பிரான்ஸ் நகரங்கள் இன்று மாலை உயர் எச்சரிக்கை மண்டலங்களாக அறிவிக்கப்படும் என்று பிரான்ஸ் இன்டர் ரேடியோ அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் வியாழக்கிழமை செய்தி மாநாட்டில் இதை அறிவிப்பார் என்று பிரான்ஸ் இன்டர் ரேடியோ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
லில்லி, லியோன், கிரெனோபில், செயிண்ட்-எட்டியென் மற்றும் துலூஸ் ஆகிய ஐந்து பிரான்ஸ் நகரங்களில் 1,00,000 பேரில் 250 பேருக்கு கொரோனா என அதிகமான நோய்த்தொற்று விகிதங்களைக் கொண்டுள்ளன.
மார்சேய் மற்றும் பாரிஸில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளதைப் போலவே, குறிப்பாக வயதானவர்களிடையே கொரோனா பரவுவதை எதிர்ப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அவசியம் என்று நேற்றிரவு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
பாரிஸ் மற்றும் மார்சேய் ஏற்கனவே உயர் எச்சரிக்கையில் உள்ளன. இதன் விளைவாக பாரிஸில் உள்ள பார்கள் இரண்டு வாரங்கள் மூட வேண்டும் மற்றும் உணவகங்களை திறக்க புதிய சுகாதார நெறிமுறைகளை அமைக்க வேண்டும் என அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 143 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்சில் புதன்கிழமை கிட்டத்தட்ட 19,000-க்கும் கூடுதலாக கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்