Wednesday, January 20, 2021
Home ஜோ‌திட‌ம் இன்றைய ராசி பலன் – 8-12-2020

இன்றைய ராசி பலன் – 8-12-2020

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. சுயதொழில் செய்பவர்கள் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அன்றாட வேலைகளை செய்வதில் சில இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். அம்பிகையை வணங்க பிரச்சனைகள் நீங்கும்.

ரிஷபம்

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்தை காணலாம். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கடின முயற்சிக்குப் பலன் கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு தொழில் ரீதியான பயணங்கள் அனுபவத்தை கொடுக்கும். பெண்களுக்கு சாதுரியமான நடவடிக்கைகள் மூலம் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களின் முயற்சிக்கு அடுத்தவர்களை பாராட்டும்படியாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நயமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களின் விடா முயற்சிக்கு உரிய பலன்களை அடையப் போகிறீர்கள் என்பதை உணரும் காலம் இது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த தோல்விகள் மாறும். நினைத்ததெல்லாம் நடக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் முன்னேற்றத்தில் இடையூறுகள் இருக்காது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவை எடுக்கும் தைரியம் பிறக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மற்றவர்களின் திறமைக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரத்தின் மூலம் முன்னேற்றத்தை காண்பீர்கள். பெண்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமான பேச்சாற்றல் கொண்ட உங்கள் ராசிக்கு எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் சில விஷயங்கள் நடப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பொறுமை காப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக முதலீடு செய்யும் விஷயங்களில் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களுடைய உதவி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கி நன்மை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பகைவர்களையும் நண்பர்களாகக் கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் உடலில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. பெண்களுக்கு இறை வழிபாடுகளில் நாட்டம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் எவ்வளவு கவலைகள் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வைப்பவர்களுக்கு பணவரவு சரளமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனக்குறை நீக்கும் நீங்க முருகப்பெருமானை வணங்குவது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்ப்புகள் நீங்கி பல வழிகளிலும் பணவரவை பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் பெறலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன அமைதி காணலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நபர்களின் வருகை மன மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்களின் கோபத்தை தூண்டக் கூடிய விஷயங்கள் நடந்தாலும் பொறுமையை கடைபிடிப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை ஆர்வத்துடன் செய்வதால் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் யோகம் உண்டு.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறுசிறு குழப்பங்கள் மனதில் தோன்றி மறையலாம். நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என அடையாளம் காணுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய வேலையில் மட்டும் கவனத்தை செலுத்துவது உத்தமம். பெண்களுக்கு குடும்ப பாரம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் திருப்தியான நிலை இருக்கும். நீங்கள் போட்டு வைத்த திட்டங்கள் பலிப்பதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவை தெம்பை கொடுக்கும். சுயதொழில் புரிபவர்கள் தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் வீண் விரயங்களையும் சந்திக்க வாய்ப்புக்கள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software