மேஷம்
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். சந்தோஷமான செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும். வரவு வாயிற்கதவைத் தட்டும். வாகன யோகம் உண்டு. பயணத்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
புதிய ஒப்பந்தங்கள்வந்து சேரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். அரசியல் வாதிகளின் சந்திப்பால் ஆதாயம் கிட்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கல்–கொடுக்கல்கள் திருப்தியளிக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபாரம் சூடு பிடிக்கும். அண்டிவந்தோருக்கு அன்போடு உதவி செய்வீர்கள். பயணத்தின் போது விழிப்புணர்ச்சி தேவை. மாலை நேரத்தில் சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.
கடகம்
மனக்குறை அகலும் நாள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும். வியாபாரம் தொழிலில் விருப்பம் போல் லாபம் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வீண்பழிகள் அகலும்.
சிம்மம்
திட்டமிட்டகாரியம் திட்டமிட்டபடியே நடை பெறும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்கிச் சேர்ப்பத்தில் ஆர்வம் கூடும். எதிரிகளின் தொல்லை குறையும்.
கன்னி
பொருளாதார நெருக்கடி அகலும் நாள். பொருள்வரவு திருப்திதரும். காலை நேரத்தில் காதினிக்கும் செய்தியொன்று வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொதுப்பிரச்சினையில் ஈடுபட்டு புகழ்பெறுவீர்கள்.
துலாம்
பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும் நாள். பங்காளிப் பகை மாறும். உடன் பிறப்புகளால் உயர்வு கிட்டும். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கூட்டுத் தொழிலில் இருந்த தகராறுகள் மாறும்.
விருச்சிகம்
மிகுந்தகவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி குறையும். எடுத்த காரியத்தை முடிப்பதில் எண்ணற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். இருப்பினும் இறைவழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும்.
தனுசு
திருமணத்தடை அகலும் நாள். திடீர் பயணத்தால் வருமானம் உண்டு. நேற்றைய பாக்கிகள் இன்று வசூலாகும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். எதிரிகள் விலகுவர்.
மகரம்
நேர்முகத் தேர்வில் நினைத்தது நடக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். இடம், பூமி சம்மந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் போட்டிகள் அகலும். குடும்பத்தில் சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது.
கும்பம்
தனவரவில் இருந்த தடைகள் அகலும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் ஒன்று நிறைவேறும். அரசு வழி விவகாரங்களை அனுகூலமாக முடிப்பீர்கள்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டுச் செல்வர். கடன்சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும். தொழிலை விரிவுபடுத்த புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.