மேஷம்

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீ ர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபல ங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக் காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி

கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவே ற்றுவீர்கள். பிரியமா னவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்

துலாம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். மற்றவர்களுக்கு உதவப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தர்மசங்கட மான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பா ர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். பயணங்களால் பலனடை வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற் றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் உணவு, கமிஷன், புரோக்கரேஜ் வகை களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தின் அடிப் படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத் யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். கனவு நனவாகும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here