மேஷம்

மேஷம்: காலை 11.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: காலை 11.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

கடகம்

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

கன்னி: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்

துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: காலை 11.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வீண் குழப்பங்கள் வந்துச் செல்லும். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு

தனுசு: காலை 11.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிர்பா ர்த்தவை தாமதமாகும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

மகரம்

மகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கும்பம்

கும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

மீனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வ தற்கான வழியை யோசி ப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here