Thursday, June 4, 2020
Home தொழில்நுட்பம் இந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

இந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

உலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள் திணறி வருகின்றனர். போகும் போக்கை பார்த்தால், இன்ஸ்டால் செய்யுங்கள் என்பதை விட அன் இன்ஸ்டால் செய்யுங்கள் என்கிற அறிவிப்பே அதிகம் பரவி வருகிறது.

கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் பிளே ஸ்டோர் சமீப நாட்களாக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஏனெனில் கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே, கூகுள் பிளே ஸ்டோரில் 40-க்கும் மேற்பட்ட மால்வேர் ஆப்ஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘Dangerous Apps’ என்கிற குறியீட்டு பெயரின் கீழ் 33 ஆப்ஸ்கள் பட்டியலிடப்பட்டு, அவைகளை உடனடியாக Uninstall செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மேலுமொரு ஆப், அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இது சார்ந்த அறிவிப்பை தி ஹேக்கர் நியூஸ் அதன் டிவிட்டர் தளம் வழியாக நம்முடன் பகிர்ந்துள்ளது.

அந்த பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ள ஆப்பின் பெயர் – CamScanner ஆகும். இந்த ஆப் ஆனது உலகெங்கிலும் மில்லியன் கணக்கான பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படி இருந்தால் இதை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளக்கமும், விபரீதமும்!
- Advertisement -

காஸ்பர்ஸ்கி ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த தீம்பொருள் (மால்வேர்) ஆப் ஆனது “OCR எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெக்னிகேஷன் மூலம் ஸ்மார்ட்போன் வழியாகவே PDF-களை உருவாக்கும் ஒரு ஆப்” என்கிற விளக்கத்தை தாங்கியுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் படி, “இந்த ஆப் ஆனது தீங்கிழைக்கும் தொகுதிகளை கொண்ட விளம்பரங்களுடன் ஷிப்பிங் செய்யப்படுகிறது.”

கேம்ஸ்கேனர் என்பது “ஒரு முறையான பயன்பாடு” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது சட்டத்திற்கு அல்லது விதிகளுக்கு இணங்கியது என்கிறார்கள். மேலும் இந்த ஆப்பில் “தீங்கிழைக்கும் நோக்கங்கள் எதுவும் இல்லை” என்றும் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த கேம்ஸ்கேனர் ஆப் ஆனது அதன் டெவலப்பர்களுக்கு இயல்பான வணிக வருவாயை உருவாக்க, விளம்பரங்களை வெளிப்படையாக பயன்படுத்துகின்றன. உடன் கூடுதல் வருவாயை உருவாக்க In-app purchases-களும் உள்ளன. அவைகள் “ஒரு கட்டத்தில் அது மால்வேர் ஆக மாறியது” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திருட உதவும் ட்ரோஜன் டிராப்பர்!

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆப்பில் “ட்ரோஜன் டிராப்பர்” எனும் தீங்கு விழைவிக்கும் தொகுதி உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் உருவான மற்றொரு தீம்பொருளை அனுப்பி வைக்க உதவும் “விநியோக வழிமுறை” ஆக வடிவமைக்கப்பட்ட ஒரு தீம்பொருள் ஆகும்.

எதையெல்லாம் திருடலாம்? என்னவெல்லாம் செய்யலாம்?

ஆக இதன் வழியாக ஒரு ஹேக்கரால், உங்களின் வங்கி சான்றுகளை திருடலாம் அல்லது போலி விளம்பர க்ளிக்குகளை உருவாக்கலாம் அல்லது போலியான சந்தாக்களுடன் உங்களை சைன்-அப் செய்து இணைக்கலாம். பாதுகாப்பை விரும்பும் பயனரால் CamScanner எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்யாமல் இருப்பதும், ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் அதை அன்இன்ஸ்டால் செய்வதும் மிக நல்லது.

 

- Advertisment -

ஏனைய செய்திகள்

பெண்களே!… இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா? இனியும் வெட்கப்பட வேண்டாம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம். மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வீட்டில் விசேஷம்!… உண்மை வெளியானதால் ரசிகர்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா, நிஜத்திலும் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், இதில் மீனா என்ற கதாபாத்திரத்தில் ஹேமா என்ற...

நடிகை குஷ்புவா இது? இளம் மகள்களையும் மிஞ்சிய அழகு! கிரங்கிப் போன...

குஷ்பு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின்களில் ஒருவர். இன்றும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹீரோயின்களில் கோவில் கட்டப்பட்ட ஒரு நடிகை என்றால் அது...

நடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா?.. உறுதி செய்த...

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை வெங்கட் பிரபு இயக்க, அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்று சிறப்பு சிகிச்சைகள் எடுத்து உடல் எடையைக்...

குபேர பொம்மையை வீட்டில் எங்கே வைக்க வேண்டும்..?

குபேர பொம்மையினை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டில் எந்த இடத்தில் குபேர பொம்மையை வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அலங்காரத்திற்காகவும் குபேர பொம்மையை வீட்டில் வைத்திருப்பர். கடவுளாக குபேர...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline