இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி என கனடாவில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சுமார் 5 லட்சம் டோஸ்களை கனடாவுக்கு இந்தியா கடந்த புதன் கிழமையன்று அனுப்பியது.
அதே போல அடுத்த அனுப்பீடாக 1.5 மில்லியன் டோஸ்கள் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு அனுப்பப்படவுள்ளது. இது தொடர்பாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூரோ பேசுகையில், உலகமே கோவிட்19-ஐ வெல்ல வேண்டுமெனில் அதற்கு இந்தியாவின் தடுப்பூசிப் பங்களிப்பு பெரிய அளவில் உதவுகிறது.
ஏனெனில் இந்தியாவின் மருந்து உற்பத்தித் திறன் அப்படி. பிரதமர் மோடி அந்த உற்பத்தித் திறனை உலகுடன் பகிர்ந்து கொள்கிறார் என பாராட்டினார்.
இந்த நிலையில் கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோவில் சில முக்கிய இடங்களில் சில பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகமான, நன்றி! இந்தியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
கனடாவுக்கு கோவிட் 19 வாக்சின் அனுப்பியதற்கு நன்றி, லாங் லிவ் கனடா, இந்தியா உறவுகள் என்று எழுதப்பட்டுள்ளது.