IPLலில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி வீரர்கள்பட்டியலில் இடம் பிடித்த. நடராஜன். இந்திய அணிக்காக, தேர்வாகியிருப்பது இதுதான் முதல் முறை. கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல், சிறப்பாக செயல்பட்டு, தன்னிடம் தனித்திறமை இருப்பதாக, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் புரிய வைத்துள்ளார். இதன் காரணமாக, இவரது சம்பளமும், தனித்தன்மையாகவே பார்க்கப்படுகின்றது மற்ற அறிமுக வீரர்களுக்கு, இந்திய அணி நிர்வாகம் கொடுத்த சம்பள தொகையை விட, நடராஜனுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்திய அணி வீரர்களின் சம்பளத்தை, கிரேட் அடிப்படையில்தான் வழங்குவார்கள். A ப்ளஸ் கிரேட் என்றால், வருடத்திற்கு ஏழு கோடியும், அதே A மைனஸ் கிரேட் என்றால், வருடத்திற்கு ஐந்து கோடியும், B கிரேட் என்றால், மூன்று கோடியும் C கிரேட் என்றால், ஒரு கோடியும் என வழங்கப்படுகின்றது.
நடராஜன் அறிமுக வீரர் என்பதால், இவர் C கிரேட்டில் தான் வருவார் இந்த C கிரேட்வரிசை, கடந்த செப்டெம்பர் மாதமே முடிவடைந்து விட்டது. செப்டம்பருக்கு பிறகு, C கிரேட் வரிசையை நீக்கிவிட்டு, A ப்ளஸ் கிரேட் A மைனஸ் கிரேட் B கிரேட் மட்டுமே வைத்திருக்க, BCCI முடிவெடுத்துள்ளது. நவம்பர், டிசம்பரில் இந்திய அணிக்காக விளையாடி வரும் நடராஜன், நேரடியாக B கிரேட்க்கு சென்றுவிடுவார். இதிலும் நடராஜனுக்கு அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.
பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் C கிரேட்டில், தற்போது வரை, சம்பளம் வாங்கி வரும். நிலையில், நடராஜன் இந்திய அணிக்குள் நூலைந்தவுடனே, நேரடியாக B கிரேட்க்கு சென்று, மூன்று கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக, கூறப்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிக்கு ஒரு சம்பளம் T20போட்டிக்கு ஒரு சம்பளம். மூன்று விக்கெட் எடுத்தால் ஒரு சம்பளம். குறைந்த ஓட்டங்கள் கொடுத்தால் ஒரு சம்பளம் என இப்படியும் பல வழிகளில் நடராஜனுக்கு சம்பளம் கிடைக்கும் என்பதால் கிட்டத்தட்ட மூன்று முதல் மூன்றரை கோடி வரை நடராஜனுக்கு BCCI வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது.