கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது ஆதரவாளர்களை சந்தித்ததற்கு மருத்துவ தரப்பினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
மருத்துவ மனையின் பிரதான வாசலுக்கு கண்ணாடியினால் மூடிய மகழூந்தில் சென்ற அவர் ஆதரவாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்ததற்கே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஜனாதிபதி, கொரோனா தொற்றாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய நடைமுறைகளை முற்றாக புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.அவருடன், மகிழூந்தில் இருந்த புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளின் தேகநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதன் பின்னரேயே ஜனாதிபதி அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் ஒரு கட்டமாகவே அவர் மருத்துவ மனைக்கு வெளியே தொற்று ஏற்பட்ட நிலையில் சென்றுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு உள்ளான அமெரிக்க ஜனாதிபதியின் தேகநிலை குறித்து கடந்த சில நாட்களாக மாறுபட்ட பல செய்திகள் வெளியாகியிரந்த நிலையில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக எதிர்கட்சிகளும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடின் ஆகியோர் ஒரே மேடையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப், அவரது பாரியார் மற்றும் அவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக செயல்படும் முக்கிய ஆதரவாளர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரச்சார செயல்பாடுகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று தாக்குதலுக்கு உள்ளாகிய நாடுகளில் அமெரிக்காவே மோசமாக பாதிப்படைந்துள்ளது.ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரங்களுக்கு அமைய கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் 74 லட்சம் மக்களை பாதித்துள்ளன.அவர்களில், 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.