Thursday, April 2, 2020

ஆகஸ்டு மாதத்தில் இந்த மூன்று ராசிக்காரங்க அடித்து தூள் கிளப்பப்போறாங்க… உங்களது ராசி இருக்குதா?

அண்மைய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் கிரகங்கள் கடக ராசியில் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுனம் ராசியில் ராகு, புதன், சந்திரன் கடகத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்திரன் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 17ஆம் தேதி சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் செவ்வாய் உடன் இணைகிறார். விருச்சிகத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைகிறார். தனுசு ராசியில் சனி, கேது இணைந்திருக்கின்றனர். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் ஆடி, ஆவணி இரண்டு மாதங்களும் பாதி பாதி உள்ளன. இந்த மாதத்தில் பணவருமானம் யாருக்கு அதிகரிக்கும், புதிய வேலை கிடைக்குமா, திருமணம் முயற்சி கைகூடி வருமா பிள்ளை பேறு கிடைக்குமா என்று பல ராசிக்காரர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆடி மாதத்தில் கோவில் திருவிழாக்கள் அதிகம் நடைபெறும். ஆடிப்பூரம், அம்மன் தவசு என பல விழாக்கள் உள்ளன. ஆவணியில் ஞாயிறு விஷேசம், ராகு, கேது, சனி, குரு கிரங்கள் ஒரே இடத்தில் இருந்தாலும் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் என கிரகங்களின் நகர்வைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். ஆகஸ்ட்டில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷத்திற்கு அதிர்ஷ்டம்

ஆகஸ்ட் மாதம் மேஷ ராசிக்கு அதிர்ஷ்டமான மாதம் இந்த மாத துவக்கமே ராஜயோகத்தோடு தொடங்குகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மாத முற்பகுதியில் நான்காம் வீட்டில் கிரகங்களின் கூட்டணியால் வலுவடைந்துள்ளது. மாத பிற்பகுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என ஐந்தாம் வீடு வலுத்துள்ளது. ராசி அதிபதி செவ்வாய் நீசமாக இருக்கிறார். இதனால் தடைகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனர். 9ஆம் தேதி பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செவ்வாய் நகர்வதால் நன்மைகள் நடைபெறும்.

காதலில் வெற்றி கிடைக்கும்

17ஆம் தேதிக்கு மேல் திருமண தடைகள் விலகும். நான்காம் வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கையால் சில பிரச்சினைகள் இருந்தன. இரண்டும் இடப்பெயர்ச்சி அடைந்து ஐந்தாம் வீட்டிற்கு நகர்வதால் நோய்கள் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் பெரும். மனதில் நினைத்த நபரை காதல் வெற்றி பெற்று மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்வார்கள். பெண்களுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. விசா பிரச்சினைகள் தீரும் காலம் வந்து விட்டது, மலைமேல் இருக்கும் முருகனை வழிபடுங்கள். விநாயகரை வணங்குங்கள் தடைகள் நீங்கும். கால்வலி, கண் பிரச்சினைகள் சரியாக விநாயகரை வழிபடுங்கள்.

ரிஷபத்திற்கு அற்புதம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான மாதம் குருவினால் பண தடைகள் நீங்கும் அதே நேரம் சனி கேது சஞ்சாரத்தினால் செலவுகள் அதிகம் வரும் அதற்கேற்ப பணவருமானம் கிடைக்கும். பெண்களுக்கு உயர்வான மாதம். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கார் டிரைவிங் கற்றுக்கொள்விர்கள்.

வெற்றிகள் தேடி வரும்

சூரியன், சுக்கிரன் ஒன்றாக இணைந்து நான்காம் வீட்டில் இணையும் போது ராஜயோக காலமாகும் பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதன் சுக்கிரன் சூரியன் செவ்வாய் குருவிற்கு பத்தாம் வீட்டில் நான்கு கோள்கள் சந்திப்பது யோகம். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

மாணவர்களுக்கு அருமை

வெளிநாட்டு வேலை வாய்ப்பில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். மாத பிற்பகுதியில் சிலர் வீடு வாங்குவீர்கள். நிலம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அருமையான மாதம் வெற்றிகள் தேடி வரும். உயர்கல்வி யோகம் கூடி வரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகச்சிறப்பான மாதமாக அமைகிறது.

மிதுனம் பொற்காலம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொற்காலம். இரண்டாம் வீட்டில் கோள்கள் இருப்பதால் அலுவலகத்திலும் குடும்பத்திலும் கோபத்தை தவிர்க்க வேண்டும். செவ்வாய் சிம்மத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் வீடு வாங்க ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். பழைய வீட்டை விற்பீர்கள். இளைய சகோதரர் சகோதரியுடன் உறவை புதுப்பித்துக்கொள்வீர்கள். வருமானம் இந்த மாதம் மனநிறைவை தரும். பேர் புகழ் ஏற்படும். குடும்ப வாழ்க்கையிலும் உடல் நலத்திலும் அக்கறை தேவை.

பயணங்களினால் வெற்றி

சுக்கிரன் 3ஆம் வீட்டிற்கு இட மாற்றமடைவதால் நல்ல நேரம் வருகிறது. வேலை செய்பவர்களுக்கு ராசியான மாதம். சூரியன் 17ஆம் தேதி இடம் மாறுவதால் பெண்களுக்கு நல்ல மாதம். மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். சிறு பயணங்கள் மிகப்பெரிய வெற்றியை தரும். கோபப்பட வேண்டாம். நிறைய முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு அற்புதமான மாதம் பேச்சிற்கு மதிப்பு கூடும். சிலருக்கு நரம்பு பிரச்சினை ஞாபக மறதி ஏற்படும். பணம் திருடு போகலாம் கவனம். அவசரப்பட வேண்டாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். பெருமாளை புதன்கிழமை வணங்கலாம். பச்சைப்பயறு தானம் செய்யலாம்.

- Advertisement -

More articles

Latest News

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..A  B  C https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || ).push({});D E F G H  I  J  K Lhttps://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னிதுலாம் விருச்சகம் தனுசுமகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 (Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார். துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ஆம் தேதியன்று அக்டோபர் 11ஆம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம்...

உயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..! மக்களே உஷார் !!

நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களுமே மிகவும் சுவையானதாக தான் இருக்கும்.ஆனால் அவற்றில் சிலவற்றால் நம் உடல் ஆரோக்கியமே பாழாகும் என்பது தெரியுமா?அதுவும் நாம் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்...

T ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

T’ என்ற எழுத்தை தங்கள் பெயர் துவக்க எழுத்தாகக் கொண்டவர்கள் தாங்கள் கூறவதே வேதம் என்பர். பிறர் தங்களிடம் யோசனை கேட்பதை விரும்புவர். அதே நேரம் பிறரிடம் நல்ல பெயர் வாங்க, நான்கு...

R ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

“R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்…. R’ என்ற எழுத்தில் பெயர் துவங்குவோர், அன்பும், அறிவும், ஆற்றலும், இயல்புத்தன்மையும், ஈகை குணமும் கொண்டவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு வலதுபுறம் திருப்பப்படுவதால் கற்பனையும்,...