கிழக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் ஒன்று யூத-விரோத பாகுபாட்டினை முன்னெடுத்ததாக கூறி உணவு டெலிவரி சாரதி ஒருவரை தண்டித்துள்ளது.
யூதர்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் உணவகங்கள் சில அளித்த புகாரின் அடிப்படையில், வியாழக்கிழமை அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
குறித்த நபரின் தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
பிரான்சில் யூதர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்கும் உணவகங்கள் சில இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடின.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு டெலிவரி சாரதி மீது அதிக புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கை தொடரப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் தங்கியிருந்து, பணியாற்றி வந்துள்ள அந்த அல்ஜீரிய நபர் குற்றவாளி என நிரூபணமானதை அடுத்து அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூதர்களுக்கு உணவு கொண்டு சென்று வழங்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ள அவரை, தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நாட்டை விட்டே வெளியேற்றுவது தான் முறை என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.