ராணுவ விமானம் ஒன்றை வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு ஒன்று பின்தொடர்வதாக வெளியான வீடியோ காட்சிகள் இணையத்தை கதிகலங்க வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் உள்ள நபர் ஒருவர் குறித்த காணொளி காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

குறித்த நபர் லிங்கன் பகுதியில் உள்ள தமது குடியிருப்பில் வாசித்துக் கொண்டிருந்தபோது வானத்தை தமது கமெராவால் ஜூம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கண்ட காட்சி அவரை கதிகலங்க வைத்துள்ளது, ராணுவ விமானம் ஒன்று சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது.

அதனை மிக அருகாமையில் தட்டு போன்ற பொருள் ஒன்று பின்தொடர்ந்து சென்றுள்ளது.

தமது குடியிருப்பின் அருகாமையில் ராணுவ விமானிகள் பயிற்சியில் ஈடுபடுவது வாடிக்கை, அதனை தாம் விரும்பி ரசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே பறக்கும் தட்டு ஒன்று ராணுவ விமானத்தை பின்தொடர்வதை அவர் தமது கமெராவில் பதிவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பறக்கும் தட்டானது குறித்த விமானத்தை தாண்டி சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முதலில் ராணுவ விமானத்தை ஹெலிகொப்டர் தொடர்வதாக கருதியதாகவும், ஆனால் ஹெலிகொப்டரால் ராணுவ விமானத்தை முந்திச் செல்ல முடியாது என்பதால் தமக்கு சந்தேகம் வலுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் குறித்த வீடியோவை பார்த்த சிலர், இருவெறு உயரத்தில் இருந்து இரண்டு விமானங்கள் பறந்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

flight usa -

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here