நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இன்று 70-வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், அன்புள்ள ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து என்றும் தெரிவித்துள்ளார்.
Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2020
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றுள்ளார்.
தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2020
167 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடித்து கலைச்சேவை ஆற்றியதற்காக பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை பெற்றுள்ளதோடு, 45 ஆண்டுகள் திரை உலகில் கடந்துவிட்டாலும் ரஜினியின் 168 வது திரைப்படமான அண்ணாத்த திரைப்படத்திற்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவுவதே அவரின் திரை ஆளுமைக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.