பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செய்திவாசிப்பாளரான அனிதா சிறிய விசயத்தை பெரிதாக சண்டை போடுவது போல தெரிகிறது. சுரேஷ் சக்ரவர்த்திக்கும் அனிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளை வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இதற்கிடையில் ரேகா, சனம், கேப்ரியல்லா, சம்யுக்தா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதிஷ் கிருஷ்ணன் தற்போதைய பதிவில் அனிதா 3 சீசன் பிக்பாஸையும் தன் செல்லில் ஏற்றியுள்ளார். எலிமினேட் ஆனாலும் சீக்ரட் ரூமில் வச்சிடுவாங்க போலயே. மிஸ்டர் உருளகிழங்கு மற்றும் மிஸ்டர் தக்காளி என சுரேஷ் மற்றும் சனத்தை குறிப்பிட்டுள்ளார், சிவானி டான்ஸ் நல்லா இல்ல, சூப்பர் சிங்கரு உள்ள தான் இருக்கியா நீ என குறிப்பிட்டுள்ளார்.