நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கிய படம்‘அமரகாவியம்’. இதில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாகவும், மியா ஜார்ஜ் கதாநாயகியாகவும் நடித்தனர். தன் தம்பியை தமிழ்சினிமாவில் நிலைநிறுத்த ஆர்யா முன்வந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த படம்.

நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடுவதற்காகவே ஒரு டிவி ரியாலிட்டி ஷோ நடத்தியது. அதில் பல பெண்கள் கியூவில் வந்து நின்றாலும் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டார்.

அவர் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால் அவரது தம்பி நடிகர் சத்யா தற்போது முதலில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BeFunky collage 21 1078x516 1 -அவர் நீண்ட நாட்களாக காதலித்து வரும் பாவனா என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.

தற்போது அண்ணனுக்கு முன்பாகவே தம்பி திருமணம் முடிக்கப்போகிறார் என்பதால் இதைப்பற்றி திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டனர்.ஆனால் இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது அவர் மீண்டும் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என்ற பதிலையே கூறுகிறார்.ஆர்யாவிற்கு எப்போது திருமணம் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here