பிக்பாஸ் நிகழ்ச்சியானது 97 நாட்களை எட்டியுள்ள நிலையில், டிக்கெட் பினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகிறது. இதில், போட்டியாளர்கள் புள்ளிகளுக்காக வெறித்தனமாக விளையாடி கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் நடைப்பெற்ற டாஸ்கில், போட்டியாளர்களுக்குள்ளே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஆரி, ரியோ, பாலா, கேபி, சோம் என ஐந்து பேரும் வெளியேறினர்.
இதன்பின்னர், ஆடிய ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் கடுமையாக டாஸ்கை 5 மணி நேரத்திற்கு பக்கமாக விளையாடினர். இவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பிக்பாஸும் சிங்கப்பெண்ணே பாடலை ஒளிப்பரப்பி உற்சாகப்படுத்தினர்.
இதனிடையே, இந்த டாஸ்கை கண்டு ரம்யா பாண்டியனின் தம்பி பரசு இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு ”இது போதும் நீ ஜெயிச்சுட்ட மாறா என பதிவிட்டுள்ளார்”. மேலும், ஷிவானியையும் நீங்களும் வேற லெவல் என பதிவிட்டுள்ளார்.
<
View this post on Instagram
/div>